ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.;
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் வரவு-செலவு கணக்கு வாசிக்கப்பட்டு, பொது நிதிகளில் பணிகள் தேர்வு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டது. மேலும் அனைத்து வார்டுகளிலும் குடிநீர், கழிவுநீர், கால்வாய் வசதி, சாலை வசதி உள்ளிட்ட கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் என்.கே.கர்ணன் உள்பட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் உதவியாளர் தீபா நன்றி கூறினார்.