ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-08-21 18:00 GMT

ஆலங்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. அதன் அருகில் மருத்துவமனைக்கு என தனியாக மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் காகம் அமர்ந்ததால் மருத்துவமனையில் உள்ள 4-க்கும் மேற்பட்ட மின்மீட்டர்கள் தீப்பிடித்தன. மேலும் மின்சாதன பொருட்களும் எரிந்தன. இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 2 பேர் உடனடியாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளையும் மருத்துவமனை அறையில் இருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலிலும், வரண்டாவிலும் அமர வைக்கப்பட்டனர். இந்நிலையில் மின்மாற்றியில் அடிபட்ட காகம் செத்தது. மேலும் மருத்துவமனையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர். இதையடுத்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தீப்பிடித்து எரிந்த மின்மீட்டர்களை சரி செய்து, மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனையில் மின் மீட்டர்களில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்