அட்சயபுரீஸ்வரர் கோவிலில் அட்சய திருதியை விழா

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவிலில் அட்சய திருதியை விழா நடந்தது. இந்த விழாவில் சாமியின் பாதங்களில் தங்க, வைர நகைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

Update: 2023-04-23 20:12 GMT

சேதுபாவாசத்திரம்:

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவிலில் அட்சய திருதியை விழா நடந்தது. இந்த விழாவில் சாமியின் பாதங்களில் தங்க, வைர நகைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

அட்சயபுரீஸ்வரர் கோவில்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே விளங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திருதியை அட்சய திருதியை நாளாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் அட்சய திருதியை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அட்சய திருதியை விழா

இந்த விழாவில் திரளான பக்தர்கள் தங்களுடைய வெள்ளி, தங்கம், வைர நகைகளை கொண்டு வந்து அட்சயபுரீஸ்வரர் பாதங்களில் வைத்து வழிபட்டு வாங்கி செல்வது வழக்கம்.இவ்வாறு செய்வதால் தங்களது வீடுகளில் செல்வம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை விழா நடைபெற்றது.

சாமியின் பாதத்தில் ஆபரணங்களை வைத்து வழிபாடு

இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வெள்ளி, தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களை சாமியின் பாதத்தில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்