காட்டுப்புத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அஜித் ரசிகர்கள் வழங்கினர்

காட்டுப்புத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அஜித் ரசிகர்கள் வழங்கினர்

Update: 2023-01-10 19:00 GMT

காட்டுப்புத்தூரில் அறம்மகிழ் அறக்கட்டளை, அஜித் ரசிகர் நற்பணி இயக்கம் இணைந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினர். நிகழ்ச்சிக்கு அறம் மகிழ் அறக்கட்டளை நிர்வாகி லோகநாதன் தலைமை தாங்கினார். அஜித் நற்பணி இயக்கத்தை சேர்ந்த இஸ்ரோவில் பணியாற்றி வரும் மதுசூதனன் என்ற பில்லா மது அறக்கட்டளையில் உள்ள 200 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நடிகர் அஜித்தின் பிறந்தநாள், திருமண நாள், அவரது குடும்பத்தினரின் பிறந்தநாள் உள்ளிட்ட நாட்களிலும் நலத்திட்ட உதவிகளை மதுசூதனன் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியாவதையொட்டி இந்த நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்