காமராஜர் சிலைக்கு அய்யாத்துரை பாண்டியன் மரியாதை
பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலைக்கு அய்யாத்துரை பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
பாவூர்சத்திரம்:
அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராக அய்யாத்துரைபாண்டியன் நியமனம் செய்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்தார். இதையடுத்து புதிதாக பொறுப்பேற்ற அய்யாத்துரைப்பாண்டியன் தென்காசி தெற்கு மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன் மற்றும் நிர்வாகிகள் சேர்மபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் செங்கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., அ.தி.மு.க நிர்வாகிகள் பொய்கை மாரியப்பன் மற்றும் அய்யாதுரை பாண்டியர் பேரவையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்திற்கு வந்த அய்யாதுரை பாண்டியனுக்கு மாவட்ட எல்கையான கரிவலம்வந்தநல்லூரில் அ.தி.மு.க.வின சிறப்பாக வரவேற்பு அளித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, சங்கரன்கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தனது சொந்த ஊரான தலைவன் கோட்டையில் அமைந்துள்ள குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர்களான குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளி, செல்வ மோகன்தாஸ் பாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதன் பின்னர் கடையநல்லூரில் சவுதி அரேபியா அம்மா பேரவை செயலாளர் எஸ்.எம்.மைதீன் ஏற்பாட்டில் கடையநல்லூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் தர்காவிற்கு சென்று 40 தொகுதிகளும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டுமென வழிபாடு நடத்தினார்.
அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் அய்யாதுரைபாண்டியன் செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.