ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்

ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

Update: 2023-04-12 18:36 GMT

கரூரில் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் காலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வடிவேலன் மாவட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். மாநில செயலாளர் செல்வராஜ் கொடியேற்றி வைத்து மாநில குழுவின் முடிவுகள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை குறைந்தபட்சம் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேணடும், கட்டுமான தொழிலில் பணியாற்றும் பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், வாரியத்தில் பதிவு பெற்ற 60 வயது நிறைந்த அனைவருக்கும் பென்ஷன் வழங்க வேண்டும், நலிவுற்ற மூத்த கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசே நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது மறுவாழ்வு இல்லங்கள் மாவட்டம் தோறும் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்