ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள போக்குவரத்து நகர் கிளை அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். சங்கத்தலைவர் மல்லி தியாகராஜன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஏ.ஐ.டி.யூ.சி. தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், மாநில செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா, வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சம்மேளன துணைத்தலைவர் துரை.மதிவாணன், கவுரவ தலைவர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அரசு பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1-4-2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களையும் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் பொருளாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.