ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
விருதுநகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் உள்ள டி.ஏ. உயர்வை வழங்க வலியுறுத்தியும், அவர்களுக்கு மருத்துவ திட்டத்தை அமல் படுத்தவும், ஓய்வு பெறும் நாளன்றே மற்ற துறைகளைப் போல பணப்பலன்களை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மண்டல தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் கருப்பையா, மத்திய சங்க பொருளாளர் மாரியப்பன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.