மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-09-13 18:11 GMT

மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஏ.ஜ.டி.யு.சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். பீடி தொழிற்சங்கம் கே.பி.மணி, போக்குவரத்து கழகம் சார்பில் வி. மயில்வாகனன், தூய்மை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த டி.கே. ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கே.ஆர்.வேணுகோபால் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மின்சார கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி உயர்வை உடனடியாக கைவிட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மருத்துவத் துறை, கூட்டுறவு, டாஸ்மார்க், பொதுத்துறை உள்ளிட்ட அனைத்து துறையில், பணிபுரியும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாடகளாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எம்.நந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் முல்லை, முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.சி.சாமிக்கண்ணு, உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஏ.ஜ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்