ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல்

திருப்பத்தூரில் கோவிக்கைகளை வலியுறித்தி மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-24 18:10 GMT

ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரில் மத்திய அரசை கண்டித்தும், மாநில அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் தேவதாஸ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர துணை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார். நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.விவசாய சங்க மாவட்ட செயலாளர் முல்லை, மாவட்ட துணை செயலாளர் நந்தி, சாமிக்கண்ணு, கே.முருகன், வேணுகோபால், மயில்வாகனம் உள்பட பலர் பேசினார்கள்.

பணி நிரந்தரம்

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் 44 சட்டமுனையங்களை ரத்துசெய்ய வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.21 ஆயிரத்துக்கு குறைவில்லாத மாத ஊதியம் வழங்க வேண்டும், நலவாரியம் உள்ளிட்ட அனைத்திலும் ரூ.6,000 மாதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஆஷா, தூய்மை பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் 240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், நடைபாதை வியாபாரிகளுக்கு நகராட்சி மூலம் ஸ்மார்ட் கார்டு, வங்கி கடன் உதவி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தினர்.

சாலை மறியல்

அப்போது நகராட்சி துப்புரவு, பீடி, டேனரி, காலணி மற்றும் ஷூ தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பத்தூர்- வாணியம்பாடி மெயின் ரோடு கலெக்டர் அலுவலக சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை திருப்பத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்