சென்னையில் காற்று மாசுபாடு குறையத் தொடங்கியது - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில் இன்று காற்றின் தரம் உயர்ந்து, மாசுபாடு குறைந்துள்ளது.;
சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் பட்டாசு வெடித்ததில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அதன் தாக்கம் குறைந்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 300-க்கும் மேல் பதிவாகி இருந்த நிலையில், நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில் இன்று காற்றின் தரம் உயர்ந்து, மாசுபாடு குறைந்துள்ளது. நேற்று சென்னை முழுவதும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாசுபாடு குறைந்துள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.