ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 75 கல்லூரிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது பற்றியும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பயனுள்ளவாறு எவ்வாறு ஆராய்ச்சி மேற்கொள்வது என்பது பற்றியும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் எடுத்துரைத்தார். தமிழ்நாடு விவசாய கல்லூரி முன்னாள் இயக்குனர் சுப்பிரமணியன், வி.ஐ.டி. சென்னை கேம்பஸ் டாக்டர் ராஜசேகர், சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வெங்கடேசன், சுரேஷ், திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.