எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தை எழுப்பும் அதிமுக..!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்துள்ளனர்.

Update: 2023-04-21 04:34 GMT

சென்னை,

இன்றுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவுள்ள நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுகவினர் சந்தித்து வலியுறுத்தினர். அதிமுக சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டுள்ள நிலையில் சபாநாயகரை சந்தித்தனர். அதிமுக கொறாடா வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் இருந்தனர். சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக வலியுறுத்தி உள்ளனர் .

Tags:    

மேலும் செய்திகள்