கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மாலை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மாலை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர். அவரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்க உள்ளனர்.
கவர்னரிடம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, செந்தில் பாலாஜி விவகாரங்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் மனு அளிக்க உள்ளதாகவும், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.