"தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி, ஆனால் தேர்தலின் முகமாக பிரதமர் மோடி உள்ளார்" - அண்ணாமலை பேட்டி
தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி, ஆனால் தேர்தலின் முகமாக பிரதமர் மோடி உள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை,
சென்னை நொச்சிக்குப்பத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
2024 தேர்தல் என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தேர்தல். தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி, ஆனால் தேர்தலின் முகமாக பிரதமர் மோடி உள்ளார். எனக்கான பணியை பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் கூறி உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுகையில் 40-யும் கைப்பற்றுவோம். நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கட்சி, தலைவர்களை கடந்து ஊழலுக்கு எதிராக பாஜக உள்ளது. 400 எம்பிக்களை பெற்று மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்.
தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் தொடங்கிவிட்டது. திமுகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை பாஜகவுக்கு வாக்குகளாக மாற்றுவதே சவால். யார் ஊழல் செய்தாலும், அதுகுறித்து தகவல், ஆதாரங்களை வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.