மேட்டூர்-சரபங்கா நதிகள் இணைப்புத் திட்டம் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கொள்ளிட அணையை நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-10-15 12:58 GMT

திருச்சி:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீரின் அளவு அதிகரித்தது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 எட்டியது. இதனால் மேட்டூர் அணைக்கு வரக்கூடிய அனைத்து நீரும் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கொள்ளிட அணையை நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரியுடன் கலந்துரையாடி அணையின் முழு விவரங்களை பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,

முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே இருந்த மூத்த பொறியாளர்களை கலந்து ஆலோசித்தபோது தண்ணீரை சேமிக்க வாய்ப்பில்லை என்றார்கள்.

தற்போது வளர்ந்துள்ள விஞ்ஞானத்தில் இறந்தவர்களையே பிழைக்க வைத்து விடுகிறார்கள். வெள்ள நீரையா சேமிக்க முடியாது. வெள்ளநீரை சேமிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளும்.

சேலம் மேட்டூர்- சரபங்கா நதிகள் இணைப்புப் பணிகள் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை. காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது அதிமுக அரசு உடைய திட்டமல்ல. அது மத்திய அரசின் திட்டம்.

தமிழகத்தில் அனைத்து ஏரி, குளங்களும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆனால், வரும் ஐந்து ஆண்டுகளில் அவர்களை படிப்படியாக நிரந்தர பணியாளர்களை பணியில் அமர்ந்த தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும்.திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கொள்ளிட அணையை நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

"முதல்-அமைச்சரை சில அமைச்சர்கள் தூங்கி விழிக்க விடாமல் செய்கிறார்களே.. என்பது குறித்தான கேள்விக்கு "அது குறித்து தான் அவரே சொல்லிவிட்டாரே.. மேற்கொண்டு நான் என்ன சொல்வது?" என்று பதில் அளித்தார்.

மேலும், "வரும் லோக்சபா தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடுமா? என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டிருக்கிறாரா?" என்பது குறித்தான கேள்விக்கு, "எனக்கு அவர் யார் என்றே தெரியாது" என்று அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

அப்போது, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் பாஸ்கரன், ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்