மத்திய உள்துறை அமைச்சரை வரும் 26 ஆம் தேதி சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.;

Update: 2023-04-22 05:22 GMT

கோப்பு படம்

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 26 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்ந்திக்க உள்ளார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பாஜக உடனான கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலைக்கும் அதிமுகவினரும் காரசாரமாக கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். அதிமுக பொதுச்செயலாளரான பிறகு அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். 

Tags:    

மேலும் செய்திகள்