அதிமுக பொதுக்குழு கூட்டம்: மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-23 03:18 GMT

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்களில் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர்.

மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் முயற்சியில் போக்குவரத்து போலீசால் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்