தமிழக அரசை கண்டித்துஅ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
அரக்கோணத்தில் தமிழக அரசை கண்டித்துஅ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரக்கோணம்
அரக்கோணம் தாலுகா அலுவலகம் அருகே அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு விவசாயிகள் ஒரு வருடமாகியும் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. விவசாயிகளிடம் கொள்முதல் பெறாமல் வியாபாரிகளிடம் கொள்முதல் பெறுகின்றனர். இதனால் விவசாயிகள் தவிக்கின்றனர். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை, மின்வெட்டு, சூதாட்டங்கள், சட்டம், ஓழுங்கு சீர்கேடு, கஞ்சா விற்பனை, மோசடி நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் பேசினார். பின்னர், கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டு கொண்டனர்.