அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம்: ஓ பன்னீர் செல்வம் பேட்டி
பொதுக்குழு என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாடகம் நடத்தியதாக ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் நாடகம் நடத்தினார்கள் என்றும் தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சசிகலா, டிடிவி தினரகரனை சந்தித்து ஆதரவு கேட்பீர்களா? என்று ஓ.பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், அதிமுகவின் நலனுக்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அரசியலில் பயணித்தவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன்"என்று பதிலளித்துள்ளார்.