அதிமுக - பாஜக மோதல் : "தேசிய தலைமை எங்களுக்கு சொன்ன அறிவுரை"- எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுரை கூறியுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்...
கடந்த சில நாட்களாக அதிமுக-தமிழக பாஜக இடையே நிலவி வரும் கருத்து மோதல்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுரை கூறியுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்...
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ,
கடந்த சில நாட்களாக பாஜக - அதிமுக கருத்து மோதல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது சிக்கலை உருவாக்கும்.
ஆனால் இது தொடர்பான தகவல்கள் தேசிய தலைமையிடம் தெரிவிக்கப்பட்டு , கடந்த வாரம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள் கிருஷ்ணகிரி வருகையின்போது எங்கள் கட்சியின் அணைத்து தலைவர்களையும் அழைத்து இனிமேல் இதுபோன்ற விரும்பத்தகாத விஷயங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
கூட்டணியை கட்டமைத்திருக்கின்ற நாம் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். என தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக முற்றும் மோதல்... "ஜேபி நட்டா எங்களுக்கு சொன்ன அறிவுரை"-பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்#aiadmk #bjp #annamalai #eps #pmmodi #jpnadda #vanathisrinivasan #thanthitv https://t.co/VP4KiENFhD
— Thanthi TV (@ThanthiTV) March 16, 2023