சுரண்டை நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சுரண்டை நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சி கூட்டம் தலைவர் வள்ளிமுருகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன், நகராட்சி ஆணையாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சொத்துவரி குறித்த தீர்மானம் நிறைவேற்ற முன்மொழியும்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 8-வது வார்டு உறுப்பினரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான சக்திவேல் தலைமையில் கவுன்சிலர்கள் வசந்தன், பொன்ராணி, மாரியப்பன், ராஜேஷ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.