அதிமுகவின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-19 14:38 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டங்கள் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், முதற்கட்டமாக 10.7.2024 முதல் 19.7.2024 வரை நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில், ஏனைய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான, கழக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டங்கள் இரண்டாம் கட்டமாக 24.7.2024 முதல் 5.8.2024 வரை நடைபெறும்.

நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், 2024, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர், கழக செய்தித் தொடர்பாளர்கள், மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்