பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை தயாரிப்பு மும்முரம்

மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.

Update: 2022-12-31 08:46 GMT

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், வேல்வார்கோட்டை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக மண்பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குலத்தொழிலான மண்பானை செய்தல், கோவில்களுக்கு விளக்குகள் மற்றும் அக்னிசட்டிகள், தெய்வங்களின் சிலைகளை வடிவமைத்தல் உள்ளிட்ட தொழில்களில் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையின்போது மண்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து நமது முன்னோர்கள் கொண்டாடி வந்தனர்.

நவீனகால மாற்றத்தால் இந்த நடைமுறை குறைந்து வருகிறது. இதனால் மண்பானை தயாரிக்கும் பணியும் தொய்வடைந்துள்ளது. குறைந்த அளவு பொதுமக்களே மண்பானைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. தற்போது பல வண்ணங்களில் மண்பானைகள் தயாரித்து வருகின்றனர்

. இந்த தொழிலை விட்டு பலர் வெளியூர்களுக்கு வேலைதேடி சென்றனர். இருந்தபோதும் சிலர் தொடர்ந்து தங்கள் குலத்தொழிலை செய்து வருகின்றனர். எனவே அரசு தங்களுக்கு உதவவேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்