தீபாவளியை முன்னிட்டு காய்கறிகள், பூக்கள் விலை உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டை மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விலை உயர்ந்தது.

Update: 2022-10-22 18:44 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டை மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விலை உயர்ந்தது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புது துணிகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்கி மகிழ்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளதால் இல்லத்தரசிகள் சற்று வேதனையில் உள்ளனர்.

பாளையங்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் 2 நாட்களுக்கு முன்பு ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் நேற்று ரூ.100-க்கு விற்பனையானது. ரூ.100-க்கு விற்பனையான கேரட் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.80-க்கு விற்ற பீன்ஸ் நேற்று ரூ.100-க்கும், ரூ.80-க்கு விற்பனையான இஞ்சி ரூ.100-க்கும் விலை உயர்ந்து விற்பனையானது. பூண்டு ரூ.30 விலை உயர்ந்து ரூ.100-க்கும், கோஸ் ரூ.10 விலை உயர்ந்து ரூ.40-க்கும் விற்பனையானது. அதே போல் தக்காளி ரூ.40-க்கும், கத்தரிக்காய் ரூ.30-க்கும், மிளகாய் மற்றும் பாகற்காய் ரூ.60-க்கும், உருளைக்கிழங்கு ரூ.40-க்கும் விற்பனையானது.

பூக்கள் விலையும் உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலையும் உயர்ந்து உள்ளது. ரூ.750-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.1,200-க்கும், ரூ.1,300-க்கு விற்பனையான பிச்சிப்பூ நேற்று ரூ.1,500-க்கும் விலை உயர்ந்து விற்பனையானது.

அதே போல் கேந்தி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், கோழிக்கொண்டை ரூ.70-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் அரளி ரூ.300-க்கும் சற்று விலை உயர்ந்து விற்பனையானது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறிகள் விலையும், பூக்கள் விலையும் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்