வேளாண்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் வேளாண்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-17 18:45 GMT


நாகை தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். பணி மூப்பு அடிப்படையில் பணி மாறுதல்கள் முறையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சங்க உறுப்பினர் ராஜா சுரேந்தர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்