மின்னவேட்டுவம்பாளையத்தில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்; அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்

மின்னவேட்டுவம்பாளையத்தில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்; அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்;

Update:2023-08-28 02:48 IST

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே உள்ள மின்னவேட்டுவம்பாளையம் பகுதியில் வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.38லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இதன் திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன், பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.துரைராஜ், விவசாய அணி மாநில இணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சலங்கபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் மணிமேகலை பழனிச்சாமி, துணைத்தலைவர் மாலதி குணசேகரன் மற்றும் கவுன்சிலர்கள் குத்து விளக்கு ஏற்றிவைத்தனர். இதில் ஓடத்துறை ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், பவானி ஒன்றிய துணை செயலாளர் சத்தியமூர்த்தி, சலங்கபாளையம் பேரூர் கழக செயலாளர் பழனிச்சாமி, அவைத்தலைவர் பழனிச்சாமி உள்பட கவுன்சிலர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், பல்வேறு துறைகளின் அதிகாரிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்