வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பணி
ஆச்சாள்புரம் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பணி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் களப்பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வினோஷா கருணாகரன் தலைமை தாங்கினார். விவசாய சங்க துணை தலைவர் ராஜதுரை, விவசாய சங்க செயலாளர் ஆனந்த் குமார், முன்னாள் கவுன்சிலர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வேளாண் மாணவி கமலி வரவேற்றார். நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் என்னும் தலைப்பின் கீழ் பஞ்சகவ்யம், அமிர்தகரைசலின் பயன்கள் மற்றும் செய்முறை பற்றி கல்லூரி மாணவிகள் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன், மற்றும் விவசாயிகள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.