வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் திராவகம் குடித்து தற்கொலை

கலவை அருகே வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-08 18:21 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பென்னகர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 59). இவர் வேம்பி வேளாண்மை கூட்டு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி ஈஸ்வரி, ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். மகள் படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். சம்பத் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பத் வீட்டில் இருந்த திராவகம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்த அவரது மனைவி, உறவினர்கள் உதவியுடன் செய்யார் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மனைவி வாழப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்