விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தியாகதுருகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-26 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட துணை தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பெரியசாமி, விவசாய சங்க வட்ட செயலாளர் தெய்வீகன், கரும்பு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு குறையாமல் வேலை வழங்க வேண்டும், கூலி நாள் ஒன்றுக்கு ரூ.294 வழங்க வேண்டும், திட்டத்தின் நிதியை பிற பணிகளுக்கு இடமாற்றம் செய்வதை மாநில அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கிளை செயலாளர்கள் கோவிந்தராஜ், பிச்சைக்காரன், ராஜாத்தி, கிருஷ்ணமூர்த்தி, மாரி, சிங்காரம் உள்பட நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனர். முடிவில் கரும்பு விவசாய சங்க வட்ட குழு நிர்வாகி சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்