எலச்சிபாளையத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாநாடு

Update: 2023-07-02 18:45 GMT

திருச்செங்கோடு

எலச்சிபாளையத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய 4-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டினை மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் ஆனந்தன், சண்முகசுந்தரம், சந்திரன், அழகுராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சந்தைப்பேட்டை முதல் ஆலங்காடு மற்றும் துண்டுகாடு முதல் ஆயித்தாக்குட்டை வரையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சரிசெய்ய வேண்டும். வட்டூர் பள்ளிபாளையம் மக்களுக்கு சுடுகாட்டு பாதை பிரச்சினையை அதிகாரிகள் தீர்க்க வேண்டும். எலச்சிபாளையம் அரசு மருத்துவமனை எதிரே பழுதடைந்து காணப்படும் சமுதாயக்கூடத்தை சரி செய்ய வேண்டும். வட்டூர் மேட்டுப்பாளையம் நீர்வழி புறம்போக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும். ஆன்றாம்பட்டி, அப்பியாபட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். எலச்சிபாளையம் சந்தைப்பேட்டை அருகில் வசிக்கும் 40 குடும்பங்களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலாளர் பாண்டியன், திருச்சி மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்