நூறு நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம், பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களின் சார்பில் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜமாணிக்கம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச்செயலாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.