விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.600 ஆக வழங்க வேண்டும். ஆன்லைன் வருகை பதிவேடு முறையை ரத்து செய்ய வேண்டும். வருகை பதிவை காலை 9 மணியாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீனிக்கடை முக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் காத்தலிங்கம் தலைமை தாங்கினார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.