விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-08-30 19:01 GMT

பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர், மாவட்ட செயலாளர் கலையரசி தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் பக்கிரிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 250 கோரிக்கை மனுக்களை, பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் சங்க நிர்வாகிகள் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்