வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-05-12 18:45 GMT

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியரும், தலைவருமான மதன் மோகன் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள், விதை சாகுபடி தொழில் நுட்பங்கள், விதைகள், ஒட்டு ரகங்கங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து எடுத்து கூறினார்.

இதற்கிடையே வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தியாகும் சான்று விதைகள் மற்றும் வல்லுனர் விதைகளை ஆய்வு செய்ய வந்த வேளாண் உதவி இயக்குனர் திலகர் விதைகளின் பல்வேறு நிலைகள் மற்றும் அதன் பண்புகள் பற்றி விளக்கினார். விதை உற்பத்தி மற்றும் தொழில்நுட்பங்களை பற்றி விதை சான்று அலுவலர் முத்து சேகர் எடுத்துக் கூறினார். இணை பேராசிரியர்கள் பரமேஸ்வரி, சுதாகர் ஆகியோர் திருந்திய நெல் சாகுபடி, எந்திர நடவு குறித்து பேசினர். மேலும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் 120 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்