ரூ.4 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.4 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்கி போனது.

Update: 2023-06-24 21:47 GMT

மொடக்குறிச்சி

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்களான தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. 74 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.77.05-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.77.65-க்கும், 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.52.67-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.70.19-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 830-க்கு ஏலம் போனது. 17 ஆயிரத்து 532 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20.15-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.23.60-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 394-க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.4 லட்சத்து 15 ஆயிரத்து 224-க்கு ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்