156 விவசாயிகளுக்கு ரூ.63 லட்சத்தில் விவசாய கடன்

156 விவசாயிகளுக்கு ரூ.63 லட்சத்தில் விவசாய கடன்;

Update: 2022-09-19 18:45 GMT

கொரடாச்சேரி ஒன்றியம் நாளில்ஒன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைவர் மாலழகன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் பாலச்சந்திரன், கூட்டுறவு உதவி கள மேலாளர் ரவிக்குமார், ஜமாத் தலைவர் அப்துல் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 156 விவசாயிகளுக்கு ரூ.63 லட்சத்தில் விவசாய கடனை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாவாபக்ருதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்