தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது-கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது-கிராம மக்கள் கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-01-23 18:41 GMT

திருச்சுழி தாலுகாவில் உள்ள அகத்தாகுளம், வடகாரியங்குளம், நெற்காரியங்குளம், கடையனேந்தல், மீனாட்சிபுரம், கள்ளத்திகுளம், முத்தனேரி, நல்லதரை, குருந்தன்குளம், குருவிகுளம,் நத்த குளம் ஆகிய கிராமங்களில் சிப்காட் சார்பில் தமிழக அரசு தொழில் மற்றும் உணவு பூங்காக்கள் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் அழிந்து விடும் நிலையில் இந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கைவிட வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்