வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

தளபதிசமுத்திரத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-01-25 21:48 GMT

இட்டமொழி:

தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தளபதிசமுத்திரம் கீழூரில் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக மானியத்தில் களைபறிக்கும் பவர்டில்லர், மருந்து தெளிப்பான், தார்ப்பாய்கள், தையல் எந்திரம், நெல்விதை விதைக்கும் வண்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தளபதி சமுத்திரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் அருள்ராஜ் ஜேம்ஸ், 2-வது வார்டு கவுன்சிலர் அர்ச்சுனன் ஆகியோர் வேளாண் உபகரணங்களை வழங்கினார்கள். இதில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் விசுவாசராஜ், சுயஉதவிக்குழு தலைவர் சித்ராபார்வதி மற்றும் அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்