விவசாயிகளுக்கு வேளாண் செயல் விளக்க பயிற்சி
கடையம் அருகே மந்தியூரில் விவசாயிகளுக்கு வேளாண் செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
கடையம்:
கடையம் வட்டாரம் மந்தியூர் கிராமத்தில் இலை வண்ண அட்டை பற்றி வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவி மெர்ஸி ஜெரின் விளக்கம் அளித்தார். மேலும் இலை வண்ண அட்டையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், இலை வண்ண அட்டையை பயன்படுத்தி நெல் பயிர்களுக்கு தழைச்சத்து தேவையா, இல்லையா என்பதை அறிந்து தழைச்சத்தை அளிக்கலாம் என்றார். செயல்விளக்கத்தில் உதவி வேளாண் அலுவலர் ஜெகதீசன், பஞ்சயத்துதலைவர் கல்யாணசுந்தரம், தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஆஷா, அர்தரா, அனுஷியா, தாரணி பிரபா, பார்கானா, லோகதர்ஷினி, மாலிஸ்ரீ, நந்தினி, சௌமியா மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். முடிவில் இலை வண்ண அட்டை குறித்த துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.