பொள்ளாச்சி அருகே பாகற்காய் அறுவடையில் வேளாண் கல்லூரி மாணவர்கள்

பொள்ளாச்சி அருகே பாகற்காய் அறுவடையில் வேளாண் கல்லூரி மாணவர்கள்

Update: 2023-01-04 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஒடைகுளம் ராமகிருஷ்ணன் என்கிற விவசாயி பந்தல் விவசாயத்தில் பாகற்காய் சாகுபடி செய்து உள்ளார். இந்த தோட்டத்திற்கு தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் அரவிந்த், அறிவுக்கரசு, அருண்குமார், திவ்யஜோதி நாயக், தினேஷ்குமார், கோபிநாத், குணால், ஹரிஷ் ஆகியோர் சென்று பாகற்காய் சாகுபடி குறித்து கேட்டறிந்தனர். மேலும் பந்தல் விவசாயத்திற்கு உகந்த ரகங்கள், சாகுபடி முதல் அறுவடை உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர் பாகற்காய்களை மாணவர்கள் அறுவடை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்