விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சிதம்பரம் அருகே விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-09-01 17:30 GMT

அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அருகே நக்கரவந்தன்குடி கிராமத்தில் கான்சாகிப் வாய்க்கால் விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்கிறபயிர்களை கால்நடைகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பொது மக்கள் தங்களது கால்நடைகளை வெளிமேய்ச்சலுக்கு விடக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க செயலாளர் கண்ணன், வேளாண்துறை அலுவலர்கள் தீபதர்ஷினி, சிவசங்கரன், மச்சேந்திரன், தமிழரசி மற்றும் திருவக்குளம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்