விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கரூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் பாலு தலைமை தாங்கினார். ஆலோசகர் ராக்கிமுருகேசன், ஒருங்கிணைப்பாளர் காலனி மணி, கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வருகிற 5-ந்தேதி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் உழவர் தின பேரணி மற்றும் கோரிக்கை மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தென்னை விவசாயத்தை காக்க கொப்பறை தேங்காய் கொள்முதலை ரூ.150 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். உற்பத்தியாளர்களை காக்க ஒரு லிட்டர் பால் ரூ.100 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் காவல் துறை தலைவர் பாரி கலந்து கொள்ள உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.