வல்லம்:-
உழவு தொழிலை தொடங்கும் முன்பு விவசாயிகள் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் வல்லம் அருகே உள்ள செல்லப்பன்பேட்டை பகுதியில் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி விவசாயிகள் விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி ஆகியவற்றுடன் ஊர்வலமாக வயலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பின்னர் ஏர் கலப்பை பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை, சம்பா, தாளடி என 3 போக சாகுபடி நடைபெற வேண்டும் என வேண்டி இந்த நிகழ்ச்சி நடந்தது.