குறுவை தொகுப்பு திட்ட பணிகளை வேளாண்மை இயக்குனர் ஆய்வு

கொள்ளிடம் பகுதியில் குறுவை தொகுப்பு திட்ட பணிகளை வேளாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்

Update: 2022-07-02 18:08 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் குறுவை தொகுப்பு திட்ட பணிகளை மாநில வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உர மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், தற்போது 450 சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படுவது இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் முன்பை விட வாய்க்கால்கள் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது. வரும் ஆண்டில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி விஸ்தரிக்கப்படும் என்றார்.

அதனை தொடர்ந்து அவர் கொள்ளிடம் அருகே உள்ள உமையாள்பதி கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டு பருத்திப்பயிர்கள், பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் மதியரசன், கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, உர கட்டுப்பாட்டு அலுவலர் வருகுனபாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதிசிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்