திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா
சோமசமுத்திரம் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோவிலில் அக்னி வசந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன், தர்மராஜா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கலசத்தில் புனிதநீர் ஊற்றி கலச பூஜையும், 108 மூலிகைகள் கொண்டு யாக பூஜையும் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு கலச புனிதநீர் ஊற்றி மஞ்சள், குங்குமம் வைத்து கொடியேற்றி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பாண்டியநெல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஜெயகோபி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.