வேதாரண்யத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-11 19:15 GMT

கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு கிடையாது என்ற அரசு ஆணை எண்.33-ஐ நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டார தலைவர் அறிவானந்தம், மாவட்ட பிரதிநிதி சோழன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்