நாகூரில், காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
நாகூரில், காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை, நாகூர் நகர காங்கிரஸ் சார்பில் நாகூர் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் மீராஉசேன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் மக்சூதுசாகிப் வரவேற்றார். நாகூர் நகர காங்கிரஸ் தலைவர் சர்புதீன், கவுன்சிலர் முகமதுநத்தர், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் நவ்ஷாத் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் முகமதுஆரிப் கலந்து கொண்டு பேசினார். இதில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி ரபிக், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹாமாலிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகூர் நகர காங்கிரஸ் துணைத் தலைவர் கோபிநாத் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தையொட்டி நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.