ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த ஆசிரமத்தில் நடந்த குற்ற செயல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாகை ஒன்றியம் சிக்கல் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு ஒன்றிய தலைவர் விமலா தலைமை தாங்கினார். ஆர்ப் பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட பொருளாளர் சுபாதேவி, ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வி, மாலா, தெற்கு ஒன்றிய தலைவர் கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கீழ்வேளூர் அருகே உள்ள சாட்டியக்குடி கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.