கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-01-20 19:15 GMT

அரசாணை 56-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும். யு.ஜி.சி நிர்ணயித்த ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும். மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களின் பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கவுரவ விரிவுரையாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் குமரன் தலைமை தாங்கினார். இதில் அய்யப்பன், உஷாராணி, சுபா, உதயசங்கர், சத்தியா, மாரிமுத்து உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்